"கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதாகும்."
"" நான் திராவிட மரபைச் சேர்ந்தவன்" I belong to Dravidian Stock . I am proud to call myself a Dravidian."
"முதலில் முன்னேற வேண்டிய துறை சமுதாயத்துறை ஆகும். சமுதாய முன்னேற்றம் இல்லாத எல்லாம் முன்னேற்றங்களும், அஸ்திவாரம் இல்லாத முன்னேற்றங்களே ஆகும்."
"தன்னை தானே தாழ்த்தி கொள்பவனை போல தரணியில் மோசமானவன் இல்லை."
எந்த இயக்கமும் தன் வளர்ச்சிப் போக்கில் பல சாதனைகளை நிகழ்தும்,பல இடையூறுகளையும் சந்திக்கும்.திராவிட இயக்கமும் இதற்கு விதிவிலக்கன்று எனினும் தொடக்கம் முதலே கடுமையான எதிர்புகளையும் திரிபு வாதங்களையும் இவ்வியக்கம் சந்தித்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆதலால் திராவிட இயக்கத்தின் உண்மை முகத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே இப்பள்ளின் முதன்மை நோக்கமாகும். இன்று திராவிடம் என்னும் சொல் சமூக நீதியையே குறிக்கிறது என்பது வெளிப்படை திராவிடம் எனில் சமூக நீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, பகுத்தறிவு ஆகியனவே. இக் கருத்தியலைத் திசையெங்கும் கொண்டு செல்வதே திராவிடப் பள்ளியின் தலையாய நோக்கம்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயல்பாடுகளில் ஓன்றான, திராவிடப் பள்ளியை (2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில்) தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் இன்றைய தமிழ் நாட்டின் மாண்புமிகு முதலமைச்சரும் ஆகிய தளபதி அவர்கள் இணைய வழியில் தொடக்கி வைத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவர்களுக்காவது திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடு, திராவிட இயக்கத்தின் தாக்கம் ஆகியவற்றைப் பாடமாக எடுத்து, அவர்களைத் திராவிடச் சித்தாந்ததிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது நம்முடைய விருப்பம். எங்கள் எதிர்பார்பையும் தாண்டி ஆண்டுதோறும் 500 பேர் திராவிடப் பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், திராவிட இயக்க ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு பாடங்களைத் தயாரித்து அனுப்பி வருகிறோம். அதுமட்டும் அல்லாமல் இணைய வழியிலும் பாடம் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் திராவிடப் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகளில் முதல் நிலையில் வரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறோம். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15. முதல் அடுத்த ஆண்டிற்கான திராவிடப் பள்ளின் சேர்க்கை தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்கின்ற எல்லோரூம் திராவிடப் பள்ளியில் இணைந்து கொள்ளலாம். ஓர் ஆண்டிற்க்கான கட்டணம் 1500/. வாருங்கள் திராவிடப் பள்ளியில் இணையுங்கள், திராவிட இயக்கத்தின் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம். திராவிடக் கருத்தியலை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுவோம். திராவிடத் தமிழர்களாக இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்வோம். நன்றி வணக்கம்.
திராவிடப் பள்ளி முதலாமாண்டு தொடக்கவிழாகாணொளி
Frequently Asked Question
ஏதேனும் சந்தேகத்திற்கு
120, என். டி. ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600024.
+044-24726408
dravidapalli2020@gmail.com